2027 - 19 வயதுக்குட்பட்ட மகளிர் T20 உலகக் கிண்ண அட்டவணை வெளியீடு
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) 2027ஆம் ஆண்டுக்கான U-19 மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
2027 ஜனவரி 21 முதல் பெப்ரவரி 6 வரை இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன நேபாளம் மற்றும் பங்காளதேஷ் நாடுகள் இணைந்து இதனை நடத்துகின்ற மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 41 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
16 அணிகள்
பங்களாதேஷின் சிட்டகொங் (Chattogram) மற்றும் சில்ஹெட் (Sylhet) ஆகிய இடங்களிலும், நேபாளத்தின், திருபுவன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Tribhuvan International Cricket Ground) மற்றும் மேல் முல்பாணி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Upper Mulpani International Cricket Ground).ஆகிய இடங்களிலும் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தொடரின் முதல் கட்ட ஆட்டங்களில், நேபாள அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த பேட்டி ஜனவரி 22 அன்று காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடரின் இறுதிப் போட்டி பெப்ரவரி 6 அன்று சிட்டகொங்கில் நடைபெற உள்ளது (பெப்ரவரி 7 மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது).
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri