இவ்வாண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - வெளியானது அறிக்கை
எதிர்வரும் மே 2ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறை மற்றும் மே 30ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி கொண்டாட்டங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் என்.ஏ.பி.ரணவக்க, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை உறுதிசெய்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் தலைமை ஆணையர் வெளியிட்ட பட்டியலின்படி, வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறையான மே 2, 2026 மாற்றமின்றி தொடரும்.
2026ஆம் ஆண்டிற்கான 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொது விடுமுறை நாட்கள்
அதன்படி, 2026ஆம் ஆண்டில் பின்வரும் தினங்கள் மட்டுமே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
- ஜனவரி 15 வியாழக்கிழமை - தைப்பொங்கல் தினம்
- பெப்ரவரி 04 புதன்கிழமை - சுதந்திர தினம் (தேசிய தினம்)
- ஏப்ரல் 13 திங்கட்கிழமை - தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினம்
- ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை - தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினம்
- மே 01 வெள்ளிக்கிழமை - சர்வதேச தொழிலாளர் தினம்
- மே 02 சனிக்கிழமை - வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள்
- ஓகஸ்ட் 26 புதன்கிழமை - மீலாதுன் நபி (முகமது நபியின் பிறந்ததினம்)
- டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை - நத்தார் தினம்
மேற்குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே 2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.