2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17.08.2026) வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தனித்துவ அடையாளம்..
இந்தநிலையில், இன்று (17.08.2026) இத்திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.

நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




