தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அறிவித்த ஜனாதிபதி
2026 ஜனவரி மாதத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் ரூபா1,350 இலிருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
1750 ரூபா தினசரி ஊதியம்
ஜனவரி 2026 முதல் தற்போதைய குறைந்தபட்ச தினசரி ஊதியமான ரூபா 1,350ஐ ரூ. 1,550 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 1,550 சம்பளத்துடன் கூடுதலாக, அரசாங்கத்தால் தினசரி வருகை ஊக்கத்தொகையாக ரூ. 200 வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக ரூபா 5,000 மில்லியன் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்கள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், உரமிடப்படாவிட்டால், பயிர்கள் வளர்க்கப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும். 2041க்குப் பிறகு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாது.
இந்தத் தொழில் 150 ஆண்டுகள் பழமையானது. நிர்வாகத்தால் இன்னும் ஒரு தொழிலாளிக்கு ரூபா 1750 தினசரி ஊதியம் வழங்க முடியாவிட்டால், இந்தத் தொழிலின் அர்த்தம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam