அதிர்ச்சி தரும் மாற்றங்கள் 2025 இல்! பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகின..
உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடி வரும் நிலையில், வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன.
1996இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில் நடக்கப்போகும், முக்கிய விடயங்கள், அழிவுகள், போர்கள், இயற்கை சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கணித்துள்ளனர்.
அதிர்ச்சிகர கணிப்புக்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எஃப் கென்னடி, அடோல்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் இதுவரையான உலக போர்கள், இளவரசி டயானாவின் சோகமான விபத்து மற்றும் மரணம், அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றி ஆகியவை அனைத்தும் இவர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 2025ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் விடயங்கள் தொடர்பான பாபா வங்காவின் கணிப்புக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐரோப்பாவில் மக்கள் தொகையை பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர் உலக அளவில் மிகப் பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறுதல், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் முக்கிய நில அதிர்வு மற்றும் தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்படும், இறந்த எரிமலைகள் மீண்டும் உயிர்பெறுதல் உள்ளிட்ட பல கணிப்புக்களை பாபா வங்கா கணித்துள்ளார்.
இதேவேளை, பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ், ஐரோப்பிய எல்லையில் தீவிரமான போர்கள், பிரிட்டனுக்குள் உள்நாட்டு போர் மற்றும் நோய் தாக்கம், பழைய கொள்ளை நோய் திரும்புதல், பாரம்பரிய மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகை கட்டுப்படுத்தும் சக்தி மாறுதல் போன்ற கணிப்புக்களை கணித்துள்ளார்.
பாபா வங்கா 20ஆம் நூற்றாண்டில் பல்கேரியாவில் வாழ்ந்தவர். நோஸ்ட்ராடாமஸ் 16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்தவர்.
பல ஆண்டுகள் மற்றும் கலாசார வித்தியாசத்துடன் வாழ்ந்த தீர்க்க தரிசிகளின் கணிப்புக்களில் சில ஒரே மாதிரியானவை. 2025ஈம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறுதல் மற்றும் ஐரோப்பாவில் பெரும் போர் ஆகிய விடயங்களை இருவரும் கணித்துள்ளனர்.