பொலன்னறுவை மாவட்டத்தில் வெற்றியை கைப்பற்றிய அநுர
பொலன்னறுவை மாவட்ட இறுதி முடிவு
பொலன்னறுவை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 159,010 வாக்குகளை பொலன்னறுவை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 43,822 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
சர்வஜன பலன கட்சி 8587 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 351,302 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை,240,145
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 231,559
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 8586 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பொலனறுவை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 180,847 வாக்குளையும் 4 ஆசனங்களையும் பொலனறுவை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் பொலனறுவை மாவட்டத்தில் 47,781 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தையும் வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் பொலனறுவை மாவட்டத்தில் 6,792 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, பொலனறுவை மாவட்டத்தில் 6,525 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
பொலன்னறுவை - மெதிரிகிரிய
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,850 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சியினர் 2,404 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன 1,163 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

பொலன்னறுவை - பொலன்னறுவை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 66,399 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 22,650 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சியினர் 3,902 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 2,782 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

மின்னேரியா தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,138 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,394 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 1,238 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 16,052 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,184வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 425 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 230 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan