தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ரணில் திட்டவட்டம் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தானது சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு பதில் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை நிராகரித்துள்ள நிலையில், நேற்று(28) மாலை அரசியல் வட்டாரங்களில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி எதிர்க்கட்சி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இந்த அறிக்கையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக அழைப்புகளைப் பெறத் தொடங்கினார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
