பிரான்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு - கடும் அச்சத்தில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள்
பிரான்ஸில் நாளை பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதனை தோற்கடிக்கும் முயற்சியில் இடதுசாரி கூட்டணிகள் ஈடுபட்டுள்ளன.
வெளிநாட்டவர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை கொண்டுள்ள மரின் லூ பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சி ஆட்சி அமைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் தமிழர்கள்
இந்நிலையில் பிரான்ஸ் தமிழர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அச்ச நிலையில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், சட்டத்திற்கு எதிராக செயற்படும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துவோம் என மரின் லூ பென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட திட்டங்கள்
நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் வெளிநாட்டவர்களை இந்த நாடு பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸின் நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பு நடந்த 30ஆம் திகதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தகக்து.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
