கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள்
2024ஆம் ஆண்டிற்கான 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொதுமக்கள் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காலை நேரத்தில் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வீதம் மிகக்குறைவாகவே காணப்பட்டுள்ளது.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
