நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட உள்ள தாக்கம்: மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தகவல் (Video)
இலங்கையின் 2024 பாதீட்டின் விளைவாக மதுபான விற்பனையகங்களுக்கு நெகிழ்வான திறப்பு நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையமான எடிக்கின் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெகிழ்வான திறப்பு நேரங்கள், அதிக அளவில் மது அருந்துதலுக்கு தெளிவாக பங்களிக்கின்றது.
அரசு நடவடிக்கை
இந்தநிலையில் தயாரிப்பு சட்டப்பூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், மதுபானம் ஒவ்வொரு அம்சத்திலும் தீங்கு விளைவிக்கும்.
எனவே, நாட்டில் மது அருந்துவதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிகழும் 10 இறப்புகளில் எட்டு இறப்புகள் தடுக்கக் கூடிய மரணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பொருளாதார இழப்பு
2022 ஆம் ஆண்டில், மது வரி மூலம் வருவாய் 165.2 பில்லியன் ரூபாய்களாக இருந்தன எனினும் மதுபான பாவனையால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார இழப்பு 237 பில்லியன் ரூபாய்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை நாட்டின் குடிமக்கள் ஒரு நாளைக்கு 590 மில்லியன் ரூபாய்களை பியர் மற்றும் சாராயத்துக்காக செலவிடுகின்றனர்.
380 மில்லியன் ரூபாய் சிகரெட்டுகளுக்காக செலவிடுகிறது என்று எடிக்கின் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.