2023 வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்!(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (08.12.2022) நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்புகளுக்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதராவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன் 2 பேர் வாக்களிப்பில் ஈடுபடவில்லை.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வரவு-செலவுத் திட்டத்தின் விவாதம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அதன் பிரகாரம் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15ஆம் திகதி திதல் 22ஆம் திகதி வரையிலான 7 நாட்கள் இடம்பெற்றன.
22ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
