கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு கோரிக்கை
எதிர்வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு இலங்கையின் ஆயர்கள், கிறிஸ்தவ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர், அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் கடும் துன்பங்களை எதிர்நோக்குவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,கிறிஸ்தவ மக்கள் ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், கிறிஸ்மஸ் பருவத்தில் அதிக செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள், நாட்டில் தாக்கம் செலுத்தியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அர்ப்பணிப்பை செய்யுமாறு ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.