பீபா அதி சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி
2022 ஆம் ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பையில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு பீபா அமைப்பு விருது அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுள்ளது.
விளையாட்டு வீரர் பட்டம்
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டியிட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.
இதற்கமைய, இரண்டாவது முறையாக மெஸ்ஸி FIFA அமைப்பின் சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
அத்துடன், ரொனால்டோ மற்றும் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோரின் சாதனையை சமன்செய்துள்ளார்.




