இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது திருமதி உலக அழகுராணி போட்டி
2021 திருமதி உலக அழகுராணி போட்டி தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த குறித்த போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை 2021 திருமதி உலக அழகுராணி போட்டி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
2021 திருமதி அழகுராணி போட்டியை இலங்கையில் நடத்துதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டு குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, 2021 திருமதி அழகுராணி போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan