வலிசுமந்த வேதனையினை ஏற்படுத்தும் ஆண்டாக 2021 ஆம் ஆண்டு கடந்து செல்கின்றது - தவிசாளர் க.விஜிந்தன்
வலிசுமந்த வேதனையினை ஏற்படுத்தும் ஆண்டாக 2021 ஆம் ஆண்டு கடந்து செல்கின்றது என கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் (K.Vijinthan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஒளிவிழா நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தில் நிற்கின்றோம். இந்த ஆண்டு பல மோசமான துன்பங்கள், துயரங்களை தந்துள்ளது.
வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை, பாடசாலைகள் பூட்டப்பட்ட நிலை, மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்ட நிலை, மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலை, கொடிய நோய்கள் மாறி மாறி எங்களை ஆட்கொண்டிருக்கின்ற நிலை, இன்றைய அரசின் பொருளாதார நெருக்கடிகள்.
பட்டினி வாழ்வு நோக்கி எங்கள் மக்கள் தினமும் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆங்காங்கே போராட்டங்கள் என இந்த ஆண்டு பல்வேறுபட்ட விடயங்களை தாங்கி 2021ஆம் ஆண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த ஆண்டு எங்களுக்கு வலிசுமந்த வேதனையினை ஏற்படுத்துகின்ற ஆண்டாகவே அமைந்துள்ளது.
இந்த நிலமைகளில் இருந்து எங்கள் சமூகம் மாறவேண்டும். எங்கள் இளம் சமுதாயத்தினர் இந்த நிலைகளில் இருந்து மீண்டு எதிர்நீர்ச்சல் போட்டு இந்த சமூகத்தினை மீட்டெடுக்க வேண்டும். முன்னேற்றகரமான பாதை நோக்கி நகர வேண்டும்.
இவ்வாறான இடர்கள் மத்தியில் ஒவ்வொரு குடும்பங்களும் அடுத்த ஆண்டுக்கான பல்வேறு பட்ட திட்டங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கவேண்டிய காலம். ஒற்றுமையாக பயணித்தால்தான் ஒரு காரியத்தினை சரியான முறையில் சாதிக்க முடியும்.
நாங்கள் எல்லோரும் நாட்டின் நிலமை இயற்கையின் போக்கு என எல்லாவற்றினையும் கடந்து தொடர்ச்சியாக பயணிக்க வேண்டும்.
வரப்போகும் புதிய ஆண்டில் சவால்களை எதிர்கொண்டு, எங்கள் பயணத்தினை தொடர அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
