உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: 51 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Easter Easter Attack Sri Lanka
By Jenitha Jun 01, 2022 09:00 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 21.4.2019ஆம் அண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், சஹ்ரானின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின பேரிலும், காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டதுடன், இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: 51 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | 2019 Sri Lanka Easter Bombings

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள், நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 55 பேர் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்துவர முடியாத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: 51 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | 2019 Sri Lanka Easter Bombings

இதன்போது இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 பேர் தலா 50 இலட்சம் ரூபா கொண்ட சரீரப் பிணையிலும், தலா 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், மாத இறுதி வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை காலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சென்று கையெழுத்து இடவேண்டும் எனவும் உத்தரவிட்டு பிணையில் விடுவித்ததுடன், ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 69 பேரில் 13 பேர் பிணையிலும், 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US