பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பதுங்கியுள்ள ஆபத்தான இலங்கையர்கள்
பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளில் இலங்கையை சேர்ந்த 201 பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்பான 201 பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதாள உலக குழு நபர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சர்வதேச பொலிஸாருக்கு (இன்டர்போல்) வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
பாதாள உலக குற்றவாளிகள் இருக்கும் நாடுகளுடன் கலந்துரையாடல்களை தொடர்ந்து, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, 19 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள குற்றக் கும்பல்களின் சுமார் 65 தலைவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
