என்ஜின் 591 உடன் நினைவுகளை ஏந்தி புறப்பட்ட தொடருந்து!
2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் தடம் புரண்ட கொழும்பு - மாத்தறை தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று (26) அதன் என்ஜினை பொருத்திய நினைவு தொடருந்து இயக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு இலங்கை உட்பட பல நாடுகளில் பாரிய உயிர் மற்றும் உடமைச் சேதங்களை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதிக இறப்பு எண்ணிக்கை
குறித்த பேரனர்த்தத்தில் 1500இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாத்தறை எக்ஸ்பிரஸ் பேருந்து தடம் புரண்டது. உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாரிய தொடருந்து விபத்துக்களில் இதுவே அதிக உயிர் சேதங்களுடன் பதிவாகிய சம்பவமாகும்.
இந்த அனர்த்தத்தின் பின்னர், குறித்த தொடருந்தின் 591 இலக்க என்ஜின் சீரமமைக்கப்பட்டு இப்பெரும் துயரத்தின் நினைவாக வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுனாமி பேரழிவிற்கு பலியாகிய குறித்த தொடருந்து பயணிகளை நினைவுகூரும் வகையில் என்ஜின் 591இனை பொருத்திய நினைவு தொடருந்து இன்று காலை இயக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த மீள முடியா துயரத்தின் நினைவாக ஒவ்வொர வருடமும் அதே திகதியில் 591இனை பொருத்திய நினைவு தொடருந்து இயக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |