2000 ரூபா நிவாரண பணம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவிப்பு
2000 ரூபா நிவாரண பணம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அரச உதவி எதுவும் பெறாத, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அரசினால் வழங்கப்பட உள்ள ரூபா 2,000 இற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ரூபா 2000 நிவாரண உதவி விரைவாக வழங்கப்படுவதாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




