திருகோணமலை மாவட்டத்தில் 2000 ரூபாய் கொடுப்பனவு - 38435 குடும்பங்கள் தகுதி
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் எவ்வித கொடுப்பனவும் கிடைக்கப்பெறாத வறிய குடும்பங்களுக்கு 2000 ரூபா உதவித்தொகை கொடுப்பனவு பெறுவதற்காகத் திருகோணமலை மாவட்டத்தில் 38435 குடும்பங்கள் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தகுதி பெற்றுள்ளதாகவும், உரிய பிரதேச செயலக அதிகாரிகள் மூலம் குறித்த கொடுப்பனவு கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மேலும் மாவட்டத்தில் தற்போது கூடியளவு தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகளில் மக்களை அறிவுறுத்தும் வகையிலான விசேட செயற்பாடுகள் பிரதேச செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மக்கள் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடப்பதன் மூலம் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். இக்காலப்பகுதியை கூடிய கவனம் எடுத்துச் செயற்படல் இன்றியமையாதது.
மக்கள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை காட்ட வேண்டப்படுகின்றது. சில பிரதேசங்களில் மக்கள் முகக்கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது குடும்பத்தினர் தொற்றுக்குள்ளாவது மாத்திரமன்றி சமூகத்திலும் பரவக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே பொறுப்புடன் கூடிய வகையில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டிக்கொண்டார்.
மேலும் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் தடுப்பூசியின் இரண்டாம் அலகு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரையிலும் உரிய வயதுப்பிரிவுகளின் கீழ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை உடன் தங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டிக்கொண்டார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
