தம்பலகாமம் பொலிசாரால் 2000 லீட்டர் டீசல் மீட்பு: இருவர் கைது!
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(04.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜ்ஜீவ பண்டார அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தம்பலகாமம் பொலிஸார் நேற்றுமுன்தினம்(04) தம்பலகாமம் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இருவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசல் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட எரிபொருளையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.