நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள 2000ற்கும் மேற்பட்ட பேக்கரிகள்!

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Jenitha Sep 27, 2022 12:26 AM GMT
Report

கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக தொலைதூர பகுதிகளில் உள்ள அனைத்து  பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரம் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள 2000ற்கும் மேற்பட்ட பேக்கரிகள்! | 2000 Bakeries Closed Sri Lanka Food Crisis

பேக்கரிகள் மூடப்படுவதால் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக ஜெயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாரிய பேக்கரிகளே இயங்குவதாகவும், கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பாரிய அளவிலான பேக்கரிகளுக்கு மாத்திரம் கோதுமை மாவை விநியோகிப்பதாகவும், அதனால் சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வாறே இயங்குவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமால் பெரேரா,

கடும் நெருக்கடியில் சுற்றுலாத்துறை 

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள 2000ற்கும் மேற்பட்ட பேக்கரிகள்! | 2000 Bakeries Closed Sri Lanka Food Crisis

“ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான மா தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாத்துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

அப்பம் மா பிரச்சினை காரணமாக தென் மாகாணத்தில் சுமார் அறுபது வீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,

“கோதுமை மா பிரச்சினை காரணமாக ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்களும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இதனால் ஹோட்டல் மற்றும் உணவகங்களை நடத்துவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US