200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்!

Sri Lanka Upcountry People Tamils Central Province
By Dias 2 years ago
Report
Courtesy: தி.திபாகரன், M.A.

இலங்கைத்தீவிற்கு பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் தமது 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வரினும் தோட்டத்து தொழிலாளர்களின் இரத்தத்தினால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையை பற்றியோ, தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி கொளுத்து, படித்து பட்டம் பெற்ற இலங்கையர் பற்றியோ பேசுவது இன்று அவசியமாக உள்ளது.

மலையக மக்களின் 200 வது ஆண்டு கொண்டாட்டங்கள் என்று சொல்வதைவிட அவர்களின் இரத்தத்தால் கட்டி எழுப்பப்பட்ட, இலங்கைத் தீவின் மேம்பாட்டிற்காக உழைக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் இரத்தம் தோய்ந்த வரலாற்றின் குமுறல்கள் என்று குறிப்பிடுவது தான் சாலப்பொருத்தமானது.

மலையக மக்களின் இலங்கை வருகை என்பது சாதாரண கண்களுக்கு வேலை வாய்ப்புக்காக பிரித்தானியர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் என்றுதான் தெரியும். இலங்கைக் கல்வித்திட்ட பாடவிதானத்திலும், இலங்கை வரலாற்று ஏடுகளும் இவ்வாறுதான் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால் உண்மையில் ஆசியாவில் பிரித்தானிய சாம்ராஜ்யம் சாய்ந்துவிடாமல் தடுப்பதற்கு முட்டுக்கொடுப்பதற்காக அந்த மக்கள் கொண்டுவரப்பட்டு முட்டுக் கொடுக்கப்பட்டு இலங்கை தீவில் நசிந்து போனார்கள் என்பதுவே உண்மையாகும். 1796 - 98 ஆம் ஆண்டு இலங்கை தீவின் கரையோர பகுதிகளை பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றினார்கள்.

மலையக மக்களின் வரலாறு

ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகள் இரண்டு பிரிவாக நிர்வாகம் செய்யப்பட்டன. சிங்கள மக்கள் கோட்டை கமாண்ட்ரியின் கீழும், வட-கிழக்குத் தமிழர்கள் யாழ்ப்பாண காமெடியின் கீழும் நிர்வாகம் செய்யப்பட்டன.

1815 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னும் கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என மூன்று பிரிவாக இலங்கைத்தீவின் நிர்வாகத்தை பிரித்தானியர் நடத்தினர். இவ்வாறு மூன்று நிர்வாகப்பிரிவாக இலங்கை தீவு நிர்வாகம் செய்யப்பட்டதனால் அன்று பிரித்தானியருக்கு இலங்கை தீவில் இருந்து கிடைக்கின்ற வருமானத்தைவிட இலங்கைத் தீவை நிர்வாகம் செய்வதற்கான செலவு மிக அதிகமாக இருந்தது.

200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்! | 200 Years The Sri Lankans Have Absorbed The Blood

எனவே இந்த நிர்வாக செலவை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்காக 1829 கோல் புரூக் - கேமரன் சீர்திருத்தக் குழுவை பிரித்தானிய முடி நியமித்தது. இந்தக் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொண்டு நிர்வாக செலவை குறைப்பதற்கு இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்றும், பொருளாதார ரீதியில் வருமானத்தை ஈட்டுவதற்கு பெருந்துட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்த வேண்டும் என்றும்பரிந்துரை செய்தது.

அதற்காக தனியாருக்கான நில உடமை உரிமத்தை வழங்குவதற்கும் சிபாரிசுகளை செய்தது. இவற்றினை அடிப்படையாகக் கொண்டுதான் 1833 ஆம் ஆண்டு கோல் புரூக் - கேமரன் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதே நேரத்தில் வருமானத்தைவிட நிர்வாக செலவு அதிகமாக உள்ள இலங்கைத் தீவை பிரித்தானியர் ஏன் தொடர்ந்து தமது ஆளுகைக்குள் வைத்திருக்க விரும்பினார்கள்? இந்திய உபகண்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமானால் இந்து சமுத்திரத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதற்கு வட இந்து சமுத்திரத்தின் மத்திய பகுதியில் உள்ள இலங்கை தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு அரணாக அன்றைய காலத்தில் இருந்தது. இலங்கைத் தீவை வைத்துக்கொண்டு இந்து சமுத்திரத்தின் கடல் வழி போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியும்.

இலங்கையை  தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க போட்டி

17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்சியர், ஆங்கிலேயர் என நான்கு நாட்டவரும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க போட்டி போட்டனர்.

அந்தப் போட்டியில் பிரித்தானியர் முதன்மை பெற்ற வெற்றியும் பெற்றனர். பிரித்தானியர் பெற்றுக் கொண்ட குடியேற்றவாத நாடுகளை தொடர்ந்து தக்க வைப்பதற்கு இலங்கை தீவு இன்றியமையாததாக இருந்தது.

"இலங்கைத் தீவை என்னிடம் தாருங்கள் இந்த உலகத்தை நான் ஆளுவேன்"" பிரான்சிய மன்னன் நெப்போலியன் அன்று குறிப்பிட்டார். இக்கூற்று இலங்கைத் தீவின் இராணுவ கேந்திர தன்மையின் ஆழத்தை, அதன் கனதியை வெளிப்படுத்துகிறது. ஆகவே இலங்கை தீவை தொடர்ந்து தக்க வைத்தாற்தான் இந்திய பெருங்கண்டத்தை நிர்வாகித்து பெரும் இலாபம் ஈட்ட முடியும்.

200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்! | 200 Years The Sri Lankans Have Absorbed The Blood

இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே இலங்கை தீவில் தமது நிர்வாகத்தை அதிக செலவு ஏற்படினும் தொடர்ந்து பேணினார்கள். இதனை இன்னொரு வகையில் சொன்னால் பிரித்தானியர்களுக்கு இந்தியப் பெருந்தேசத்தில் இருந்து சுரண்டப்படும் வருமானம் 100%என வைத்துக் கொள்வோம் .

இலங்கை தீவின் நிர்வாகத்திற்கு ஏற்படுகின்ற செலவு இழப்பு 15% என வைத்துக் கொள்வோம் இந்தியாவிலிருந்து 100வீத வருமானத்தை பெறுவதற்கு இலங்கை தீவில் 15%செலவிட வேண்டி இருக்கிறது. அப்படி இருந்தும் இரண்டு நாடுகளையும் நிர்வகிப்பதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய தேறிய இலாபம் 85% ஆக இருக்கிறது.

எனவே இந்த 85% இலாபத்தை பெறுவதற்கு 15% தை செலவிட அவர்கள் தயாராகவே இருந்தார்கள். இந்த அடிப்படையிற்தான் பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அரணாக இலங்கை தீவை பயன்படுத்தினார்கள். அதாவது ஒரு இராணுவ தீவாக இலங்கையை பிரித்தானியர் பயன்படுத்தினர்.

எனினும் இந்த 15% இழப்பையும் தவிர்ப்பதற்காகத்தான் அவர்கள் இலங்கையில் புதிய நிர்வாக ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோல்புரூக்- கேமரன் ஆனைக்குழுவும் அரசியல் சீர்திருத்தமும் என்பதுதான் பொருத்தமானது.

இத்தகைய காலச் சூழ்நிலையிற்தான் இலங்கைத் தீவின் பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கு தேவையான தொழிலாளர்களை 1822 பிற்பகுதியில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனுமதியை பிரித்தானிய முடி வழங்கியது.

இலங்கை பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டது

இந்தப் பின்னணியில் தான் இலங்கைத் தீவின் நிர்வாகச் செலவை குறைத்து வருமானத்தை பிரித்தானியர்களுக்கு வழங்குவதற்கான உழைப்பாளர்களாக தென்னிந்திய குடிமக்கள் இலங்கைத் தீவில் கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

அவர்களின் உழைப்பினால், அவர்கள் சிந்திய வியர்வையும் இரத்தத்தினாலும் இலங்கை தீவின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டது. இலங்கைத் தீவில் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் பெற்றுக் கொண்ட பெருந்தொகை வருமானத்தில் இருந்துதான் நிர்வாகத்துறையினரின் சம்பளம் வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைத்த வருமானத்தினாற்தான் இலங்கையின் சேவைத்துறைகள் வளர்ச்சி அடைந்தன.

இலங்கைத் தீவின் போக்குவரத்து பாதைகள், புகையிறத பாதைகள், கட்டடங்கள், அணைக்கட்டுகள் என்பன விஸ்தரிக்கப்பட்டன. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் எந்த அடிப்படை வசதிகளும் அற்று ஆண் - பெண் இருபாலரும் மிகக் கடுமையாக உழைத்தும் எந்தவித வசதி வாய்ப்புகளையும் பெறாமல் உழைத்து உழைத்து அந்த மண்ணிலேயே நசிந்து மடிந்து போயினர். பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாக அந்த மக்கள் தொடர்ந்து உழைத்து இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தந்தனர்.

200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்! | 200 Years The Sri Lankans Have Absorbed The Blood

இலங்கை தீவின் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகின்ற அனைத்து வகையான சலுகைகளுக்குமான நிதியை தமது உழைப்பினாலேயே வழங்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில் இலங்கை தீவு சுதந்திரம் அடைந்த பின்னரும் இத்தகைய சூழலே நிலவியது. அதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு இலங்கை தீவில் அனைவருக்கும் வாக்குரிமையை பிரித்தானிய முடி வழங்கியது.

அப்போது மலையக மக்களும் அரசியல் உரிமையை பெற்றார்கள். ஆனாலும் இலங்கை சுதந்திரம் அடைந்து சொற்பகாலத்துக்குள் அதாவது 1949 இல் அவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது மாத்திரமல்ல குடியுரிமையையும் சிங்கள அரசு பறித்தது. நன்றிகெட்டத் தனமாக நாடுகடத்தியது.

சிங்கள அரசு மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது இலங்கை தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செயல்பூர்வ அர்த்தத்தில் மௌனிகளாக இருந்தனர். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிட வேண்டும் . இலங்கைத் தீவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் இவற்றுக்கான நிதி எங்கிருந்து வந்தது? இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை 1940களில் அரசாங்க சபையின் கல்வி அமைச்சராக இருந்த C.W.W.கன்னங்கரா என்கிறார்கள்.

இலவச கல்வியை அறிமுகம்

கன்னங்கரா இலவச கல்வியை அறிமுகப்படுத்திய போது அதற்கான நிதியை எங்கிருந்து பெற்றார். மலையக மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் பெருந்தோட்ட வருமானத்திலிருந்துதான் இலவசக் கல்விக்கான நிதி வழங்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலங்கையின் இலவச கல்வி வாய்ப்பால் இலங்கையர்கள் 89 விதமானவர்கள் கல்வி கற்றவர்கள் என்ற புள்ளி விவரத்தை பெற்று தந்தது.

200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்! | 200 Years The Sri Lankans Have Absorbed The Blood

இலங்கை தீவின் சிங்கள,தமிழ், முஸ்லிம், பரங்கியர், மலாயர் என அனைத்து இனத்தவரும் அவ்வாறே அரசு உத்தியோகத்தர்கள், பெரும் கல்விமான்கள், பேராசிரியர்கள் அரசியல் தலைவர்கள் என அனைத்து இலங்கையர்களும் மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சி இலவசக் கல்வி பெற்றார்கள் , உயிர் வாழ்ந்தார்கள் என்பதே உண்மையாகும்.

நிர்வாக சேவைத்துறை, நீர்ப்பாச்சனம், விவசாய அபிவிருத்தி, போன்ற இலங்கையின் அபிவிருத்திகள் யாவும் மலையகத் தமிழரின் இரத்தத்தை உறுஞ்சிப் பெற்ற தேசிய வருமானத்திலும் அந்நியச் செலாவணி வருமானத்திலும் இருந்தே கட்டி எழுப்பப்பட்டன.

இத்தகைய பெரும் தியாகம் செய்து உழைத்து உருக்குலைந்து போன மலையக மக்களிடம் அவர்களின் 200 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த அடிமை வாழ்வை சிந்திக்காத இலங்கை மக்கள் இந்தப் பாவத்துக்கு என்ன பிராச்சித்தம் செய்வார்கள்? என்ன பரிகார நீதி வளங்கப்போகிறார்கள்? அனைத்தின அனைத்து மத இலங்கைவாழ் மக்களும் எப்போது மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவார்கள்?


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US