அப்பிள் பழத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அப்பிள் பழங்களுக்கான இறக்குமதி வரி 200 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திராட்சைச் பழம் மற்றும் மாதுளை பழம் ஆகியவற்றின் 50 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தோடம் பழம், நாராங்காய், உலர்ந்த திராட்சை மற்றும் பெயாஸ் பழம் உட்பட அனைத்து பழங்களுக்கான இறக்குமதி வரிகளும் அறவிடப்பட்டன.
இந்த வரி அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் அப்பில், திராட்சை பழம், மாதுளை பழம் ஆகியவற்றின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சில பழங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்கள் என 367 பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.