இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் திருகோணமலை தீயணைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது!
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரம் ரூபாவே இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri