இலங்கையில் மேலும் 20 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 2,371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 140,471 ஆக உயர்ந்துள்ளது.
22,330 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 1,216,677 பேருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், 258,439 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan