போராட்டக்காரர்களுக்கு செலவிடப்படவுள்ள 20 மில்லியன் ரூபா : குற்றம் சுமத்தும் பாலித
எதிர்வரும் 30 ஆம் திகதி தனது போராட்டத்திற்காக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ள மக்களுக்காக 20 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவிட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கு சில நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரங்கே பண்டார ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரின் நெருங்கிய நபர் ஒருவர் போராட்டத்திற்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
இவரே அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விட்டு விலகுவதற்கு பணம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தமது போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு மதுபானம் வழங்குவது மற்றும் வெகுமதி வழங்குவது பற்றி நினைக்கவில்லை. எனினும் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வருவதற்கு இவ்வாறான தந்திரோபாயங்களை ஐக்கிய தேசியக்கட்சியே மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |