மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்
இலங்கையில், நாடளாவிய ரீதியில் விழாக்கள் மற்றும் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரபலமடைந்த வர்த்தகர் விரஞ்சித் தம்புகல (Viranjith Thambugala,), 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது கணக்கில் பெற்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் (Dileepa Peiris) கொழும்பு மேலதிக நீதவானிடம், இதனை தெரிவித்துள்ளார்.
எழுபது மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நிதி மோசடி
இந்தநிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த வழக்கை கையாள்வதற்காக கப்பம் கோருவது குறித்து இரகசியமான அல்லது கேமராவில் வாக்குமூலம் வழங்குவது போன்ற செயல்களால்,நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக திலீப குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிதி மோசடி மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மோசமாக பாதிக்கும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், சந்தேகநபர் வர்த்தகர் என்ற போதிலும், அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக இடமோ அல்லது தொடர்புடைய கணக்காளரோ கண்டுபிடிக்கப்படவில்லை என திலீப பீரிஸ் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri