உறுமய திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள்
உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
10,000 சுதந்திரப் பத்திரங்கள்
இதன்படி உறுமய வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 10,000 சுதந்திரப் பத்திரங்கள் வழங்கும் தேசிய விழா எதிர்வரும் 5ஆம் திகதி ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் சுதந்திரப் பத்திரங்களாக மாற்றப்பட்டு, அடிப்படை வேலைத்திட்டமாக முதலில் பத்தாயிரம் காணி உறுதிகளை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |