கிளிநொச்சியில் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து குணமடைந்து 20 பேர் வெளியேற்றம் 20 hours ago
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து இன்று வெளியேறியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணிவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று 20 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இன்று காலை 8.30 மணிவரை 28 புதிய நோயாளர்கள் குறித்த சிகிச்சை நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களிற்களில் 28 பேரும் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடன் மொத்தமாக 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 22 ஆண்களும், 55 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை,சிகிச்சை பெற்று வருபவர்களில் சர்க்கரை நோயாளி ஒருவரும், குருதி அழுத்தம் உள்ளவர்கள் மூவரும், சிறுநீரக நோயாளர் ஒருவரும், சர்க்கரை நோய் மற்றும் குருதி அழுத்த நோய் இரண்டும் உடையவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 5 வயதுக்குட்பட்ட ஒருவரும், 5-13 வயதுடையவர்கள் மூவரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்வர்கள் மூவரும் அடங்குவதுடன், ஏனையோர் இளவயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

High Voltage Tracks கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் TRPயில் மாஸ் காட்டியது எது... டாப் 5 விவரம் இதோ Cineulagam
