மீண்டும் சென்னைக்கு அனுப்பப்பட்ட 20 இந்தியர்கள்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று சென்னையை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த கடற்றொழிலாளர்கள் கடந்த ஜூன் மாத இறுதியில் இரண்டு குழுக்களாக கடலுக்குச் சென்றனர்.
கடலின் நடுவில் அவர்கள் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதற்காக இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் கடந்த ஜூலை 27 அன்று, ஒன்பது கடற்றொழிலாளர்களை கொண்ட மற்றொரு குழு கைது செய்யப்பட்டது.
விடுவிப்பு
அவர்களுக்கு நீதிமன்றத்தினால் 500,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், அபராதம் செலுத்திய ஏழு கடற்றொழிலாளர் விடுவிக்கப்பட்டு கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், மேலும் 13 கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழிலாளர்களுக்கான பயண ஆவணங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலையில் சென்னையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்றொழில் துறை அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று, அவர்களின் சொந்த கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தனர்.+





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
