இலங்கையில் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாட கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் நடந்த சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சவால்
ஆண்டுதோறும் சுமார் 300,000 சிறுவர்கள் பாடசாலைக்கு சேர்க்கப்பட்டாலும், ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் சேருகின்றனர், என்றும் சிலர் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கல்வி சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் மற்றும் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புக்காக மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை வழங்கும் கல்வி முறையின் அவசியத்தை கர்தினால் வெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



