தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த பயங்கரம் - பெண்கள் மீது தாக்குல் - ஒருவர் மரணம்
தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற அஹங்கம பொலிஸார் வீட்டினுள் பலத்த காயமடைந்த 2 பெண்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெண்கள் மீது தாக்குதல்
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 80 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அஹங்கம, திட்டகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராகும்.
குற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் அஹங்கம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam