புத்தளத்தில் இரு வேறு பிரதேசங்களில் 2 காட்டு யானைகள் உயிரிழப்பு
புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட வண்ணாத்திவில்லு மற்றும் ஆனமடுவ பிரதேச செயலகஙகளில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
அந்த வகையில் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எழுவாஙகுளம் உப்பாற்றுப் பகுதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானைகள்
இந்த நிலையில், ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெம்புவெவ பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் உயிரிழந்துள்ளது என தெரியவந்துள்ளது.

குறித்த இரண்டு காட்டு யானைகளுக்கு கால்நடை வைத்தியர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan