யாழில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை - இருவர் சிக்கினர்
யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேகநபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam