தரையில் மோதி நொறுங்கிய விமானம்! பதற வைக்கும் காணொளி
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்ஸ் தீவில் வெப்ப அலைகள் காரணமாக உருவான காட்டுத்தீ, தீவு முழுவதுமாக பரவியுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தீவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டு தீயணைப்பு படைகளுடன் சேர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிரீஸ் நாட்டு இராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
முதல் உயிரிழப்பு
இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விமானம் ஏதென்ஸின் கிழக்கே எவியா தீவில் தரையில் விழுந்து நேற்று(25.07.2023) விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி என இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
Firefighting plane crashes on the Greek Island of Evia. It is believed to have had two people on board. Survivors are currently unknown. pic.twitter.com/9ipvOeOsSK
— Breaking Aviation News & Videos (@aviationbrk) July 25, 2023
உயிரிழந்த விமானிகளில் ஒருவருக்கு 34 வயது என்றும் மற்றொருவருக்கு 27 வயது என்றும் தெரியவந்துள்ளது, இதுவே கிரீஸ் நாட்டு தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் பதிவான முதல் உயிரிழப்பு ஆகும்.
விபத்துக்கு முன்னதாக Canadair CL-215 விமானம் காட்டுத்தீயை அணைக்கும் பொருட்டு தண்ணீரை கொட்டும் காட்சிகளையும், பின் விமானம் மலைப்பகுதியில் மோதி தீப்பிடித்து எரியும் காட்சிகளையும் மாநில செய்தி ஒளிபரப்பாளரான ERT வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
