குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது குழந்தை உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் மூன்று வயதுக் குழந்தை உட்பட இரண்டு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியில் இன்று(27) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரும் அவருடன் கூட இருந்த 3 வயது பெண் குழந்தையும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலைவாணி சிவறஞ்சன் வயது-48), குயிந்தா மிகிலன்றோய்- வயது 03 ஆகிய இருவருமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு
இலக்காகியுள்ளனர்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
