ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு வடக்கு மாகாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இன்று குறித்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண செயற்குழு உறுப்பினர்கள்
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஸயன் முத்துக்குமாரசாமியும், வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் வட மாகாணத்தை பிரதிநித்தபடுத்தும் விதமாக இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய லக்ஸயன் மற்றும் நிரோஸ்குமார் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் அவர்களின் முறையே முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஒருங்கிணைப்பு செயலாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 4 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
