திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் விபத்து : இருவர் காயம்
திருகோணமலை(Trincomalee) மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் 98ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (27.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பெண் : கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
மேலதிக விசாரனை
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.

இதில் மதுகம பகுதியை சேர்ந்த எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri