கனடா விமான விபத்தில் இரு இந்திய விமானிகள் பலி
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய விமானம் ஒன்று, இலங்கை நேரப்படி, நேற்று(07.10.2023) அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான்கூவருக்கு கிழக்கே 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Chilliwack என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இந்தியர்களின் விபரம்
இந்த விபத்து சம்பவத்தில், மும்பையைச் சேர்ந்த இந்தியர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த இந்தியர்களின் பெயர்கள் முறையே, Abhay Gadroo மற்றும் Yash Vijay Ramugade என்றும், அவர்கள் இருவரும் பயிற்சி விமானிகள் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறப்பு சம்பவத்தை நேரில் பார்த்த Haylie Morris என்னும் பெண், தன் கண்களுக்கு முன்னே விமானம் ஒன்று வானிலிருந்து விழுவதை தான் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கனேடிய பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
