ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ரஷ்ய பிரஜை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி
இந்நிலையில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாட் மில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“எங்கள் தூதர்களை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தும்" என செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்க்கும் இடையே உக்கிரமான விரோதம் நிலவி வரும் நேரத்தில் இராஜதந்திரிகளின் வெளியேற்றங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.