நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக குப்பைத் தொட்டியில் கைக்குண்டுகள்
நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகரசபை பணியாளர் ஒருவரினால் இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அந்த கைக்குண்டுகள் குறித்த குப்பைத் தொட்டிக்குள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் இன்னும் உரிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
