இரண்டு அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றம் கடும் அதிருப்தி
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில், பொது கணக்குகள் குழு (COPA), அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது கட்டிட திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கோபா, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் செயல்திறன் தொடர்பான தரவு அமைப்பைப் பேணுவதாகவும், அந்தத் தரவுகளின்படி, கட்டிடத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகிய இரண்டும் குறைந்த செயல்திறன் கொண்ட, நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குழுத் தலைவர், இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள்
இதனையடுத்து, இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒரு நாள் குழுவின் முன்னிலையில் அழைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டுகளுக்கான கட்டிடத் திணைக்களத்தின் மற்றும் 2018, 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் நிதியாண்டுகளுக்கான ஆயுர்வேதத் திணைக்களம் ஆகியவை தொடர்பிலான, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் ஆகியவை குறித்த குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |