மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், ஜே.ஆர்.எஸ். அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம்(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அந்த வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த வயோதிபர்
இதன்போது, காயமடைந்த பேரனான மாணவனும்,வயோதிபரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம்(08) மாலை படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
