வல்வெட்டித்துறை கடலில் இந்திய இழுவைப்படகுகள் மோதியதில் மீனவர்கள் இருவர் மாயம்
யாழ். வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பித்த போதும் மற்றைய இருவரும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை கடல் பகுதிக்குள் நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் வல்வெட்டித்துறை மீனவர்களின் படகுகள் மீது மோதியுள்ளன. இச்சம்பவத்தில் ஒரு படகு சேதமடைந்த நிலையில் கரையேறியுள்ளது.
அப்படகில் பயணித்த இருவர் தப்பித்துக் கரைசேர்ந்துள்ளனர்.
இருப்பினும் மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த வளவன், ராகவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan