அசாதாரண காலநிலை காரணமாக யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!
நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர் பிரிவில் பலத்த காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் நிலவும் கனமழை, பலத்த காற்றுடனான சீரற்ற காலநிலை காரணமாக 12 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam