குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வு இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!
குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் நாளாக இன்றும் (31.03.2026) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம் மக்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளின் பின்னர் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நேற்று (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள்
இரண்டாம் நாளாகிய இன்று(31.03.2026) அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. அகழ்வு இடம்பெறும் இடத்தில் இதுவரை எந்தவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற அதிகாரர்கள் உள்ளிட்ட பலரும் அகழ்வுப் பணியில் கலந்து கொண்டுள்ளனர்.







அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri