கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இளம் காதலியால் ஏற்பட்ட விபரீதம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை வீதியில் யுவதியொருவரின் காதல் விவகாரம் தொடர்பில் இளைஞர்கள் குழுவிற்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குறித்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரட்டை கொலை
அத்துடன், மற்றொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் 18 வயதுடைய இளைஞரொருவர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தையை சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவருடன் இளைஞரொருவர் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
இது தவிர, குறித்த யுவதி வேறு சில இளைஞர்களுடனும் காதல் உறவுகளைப் பேணி வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த குறித்த இளைஞர்கள் குழு, அவரது காதலர்களில் ஒருவரைத் தாக்கியுள்ளனர். அங்கு தாக்குதலுக்குள்ளான இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துத் தாக்கியுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த கத்திக் குத்து மூவருக்குக் குத்தப்பட்டுள்ளது. அங்கு கத்திக் குத்துக்குள்ளான மூவரும் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர். ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.
காதலியிடம் வாக்குமூலம்
காயமடைந்த மூவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்க அந்தப் பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கத்திக் குத்துத் தாக்குதலை நடத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு இளைஞர் அந்தத் தகராாரை தீர்த்து வைக்கச் சென்று சந்தேகநபரின் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட யுவதியிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பான சந்தேகநபரான இளைஞர் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
You may Like This..