இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து! இருவர் பலி
காலி- எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று முன்தினம்(13.4.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு எல்பிட்டி பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் அதிவேகமாகப் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
மேலதிக விசாரணை
இந்த விபத்தின் கோரத்தால் இரண்டு முச்சக்கரவண்டிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan