அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனையின் படி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக இக்கைது இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு கரடிப்பூவல் பகுதியில் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி லோடர் (பெக்கோ) வாகனத்தினால் கெண்டர் ரக வாகனத்தில் மண் ஏற்றுகையில் அதிலிருந்த இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளனர்.

அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam